search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழில் முனைவோர்"

    பெரம்பலூர் மாவட்டத்தில் முதலீட்டாளர்களுக்கான கருத்தரங்கத்தில் தொழில் முனைவோருக்கு ரூ.125 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையப்பமிடப்பட்டன.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட தொழில் மையம் சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019&ஐ முன்னிட்டு முதலீட்டாளர்களுக்கான கருத்தரங்கம் பெரம்பலூரில் நடந்தது.

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன் (குன்னம்), தமிழ்ச்செல்வன்  (பெரம்பலூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் முன்னிலையில் கலெக்டர் சாந்தா தலைமையில் 99 தொழில் முனைவோருக்கு ரூ.125 கோடியே 30 லட்சத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையப்பமிடப்பட்டன. தொழில் முனைவோருக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கலெக்டர் சாந்தா வழங்கினார்.

    அப்போது அவர் பேசுகையில், கடந்த 2017&18 மற்றும் 2018&19 ஆம் நிதி ஆண்டில் இதுவரை பெரம்பலூர் மாவட்டத்தில்,    மாவட்ட தொழில் மையத்தின் மூலம் மாநில முதலீட்டு மானிய திட்டத்தில் 31 தொழில் நிறுவனங்களுக்கு ரூ.107 கோடியே 77 லட்சம் மானியமாகவும், குறைந்த அழுத்த மின் மானிய திட்டத்தில் 23 தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3    கோடியே 17 லட்சம் மானியமாகவும் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், பெரம்பலூர் மாவட்ட பால் உற்பத்தி, சின்ன வெங்காயம், பருத்தி, மக்காச்சோளம் உற்பத்தி போன்றவற்றில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்து வருகிறது. எனவே புதிதாக தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்கள் மேற்கண்ட பொருட்களில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு, ஏற்றுமதி உள்ளிட்ட துறைகளில் உள்ள தொழில்         வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

    இதையடுத்து பெரம்பலூர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் செந்தில் குமார், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் பெரம்பலூர் கிளை மேலாளர் ரவீந்திரன், சிட்கோ கிளை மேலாளர் அனிதா, மாவட்ட முன்னோடி வங்கி   மேலாளர் அருள், உதவி பொறியாளர் (தொழில்) சரவணன் ஆகியோர் பேசினர். முன்னதாக தொழில் வணிகத்துறை இணை இயக்குனர் (ரசாயனம்) முருகன் வரவேற்றார். முடிவில் மேலாளர் (கிராம தொழில் நிர்வாகம்) கஸ்தூரி நன்றி கூறினார். #tamilnews
    மயிலாடுதுறை தொழில் முனைவோரிடம் பிரதமர் மோடி, “வணக்கம்... எப்படி இருக்கிறீர்கள்?” என்று தமிழில் பேசி காணொலி காட்சி மூலம் உரையாடினார்.
    மயிலாடுதுறை:

    ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் உரையாடினார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களுடன் அவர் உரையாட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    மோடி காணொலி காட்சி மூலம் உரையாடியவர்களில் நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த சோழம்பேட்டை கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரும் ஒருவர். இவர் மயிலாடுதுறையில் ‘ஐமார்க் சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். நேற்று காலை 9.30 மணிக்கு பிரதமர் மோடி, காணொலி காட்சி மூலம் சுரேசை தொடர்பு கொண்டு உரையாடினார். சுரேஷ் தனது நிறுவனத்தில் இருந்தபடி பிரதமருடன் பேசினார்.


    சுரேசுடன் பிரதமர் பேசத்தொடங்கும் போது, “வணக்கம், எப்படி இருக்கிறீர்கள்?” என்று தமிழில் பேசி நலம் விசாரித்தார். அதன்பிறகு அவர் ஆங்கிலத்தில் உரையாடினார்.

    அப்போது, டிஜிட்டல் இந்தியா திட்டம் பற்றி விரிவாக பேசிய மோடி, டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி பொதுமக்களுக்கு குறிப்பாக ஊரக மற்றும் கிராமப்புற மக்களுக்கு பயன்பட வேண்டும் என்பதற்காகவே பொது சேவை மையம் மூலம் கொண்டு வரப்பட்டதாக கூறினார்.
    ×